Wednesday, March 20, 2013

சில பன்னீர் பூக்களும் சில கண்ணீர் துளிகளும்..!



மேகங்கள் கைகோர்க்கும் செந்நிறப் பொழுதில்
மரங்கள் குடைவிரிக்கும் பச்சை வெளியில்
விரல்கள் நோக மீட்டிக் கொண்டிருக்கிறேன்
அரங்கம் காணாத வீணையொன்றை..!
என் மெளனப் புன்னகையை
மொழிபெயர்த்தன விரல்கள்..
தந்திகளால் உள்வாங்கி
சந்தங்களாகக் கசிந்தது வீணை..
மாருதம் மனதை மருக வைக்க
சாருகேசியாய் இசைந்தது நாதம்..
கவிழ்ந்து வந்த இருளில் மயங்கி
தவழ்ந்து தாழ்கிறது கீதம்..
பசித்து மயங்கிய மழலையின் சிணுங்கலாய்
கசிந்து கணத்து உருகுகிறது என் வீணை..
அதன் மீது தாளாது உதிர்கின்றன
சில பன்னீர் பூக்களும்
சில கண்ணீர் துளிகளும்..!!

1 comment:

  1. நலமா? அன்றொரு நாள் புத்தகத் திருவிழாவில் சந்தித்த நினைவு இருக்கின்றதா?

    http://thulasidhalam.blogspot.co.nz/ இல் ஒரு பின்னூட்டம்(உங்கள் மெயில் ஐடியுடன்) இடுங்கள்.பிரசுரிக்க மாட்டேன்.

    ReplyDelete